அயோத்தி:ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், பொறியியலாளர்கள் அப்பகுதியில் மண் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பழமையான மற்றும் பாரம்பரிய கட்டுமான முறைகளை பின்பற்றி இந்தக் கோயில் கட்டப்பட உள்ளது. மேலும். இது பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்தும் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் இது கட்டப்படுகிறது.
முக்கியமாக, 'இந்தக் கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படாது' என்று மைக்ரோ பிளாகிங் தளத்தில் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கோவில் கட்டுமானத்திற்கு, செப்பு தகடுகளை உருக்கி கற்களை இணைக்க பயன்படுத்தப்படும்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி ராம ஜென்ம பூமியில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.