மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று இறுதிக்கட்டமாக ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 மக்களவைத் தொகுகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
'என்னைக் கொலை செய்ய சதித்திட்டம்' - தேஜ் பிரதாப் பகீர் குற்றச்சாட்டு! - Tej Pratap Yadav
பாட்னா: என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்தித் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் பாதுகாவலர்கள் சிலர், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிப்பதிவாளரை கடுமையாக தாக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து விளக்கம் அளித்த தேஜ் பிரதாப் யாதவ், "எனது பாதுகாவலர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு அளித்தப்பின் வெளியேற முயன்ற, எனது காரின் முன்புற கண்ணாடியை தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர் உடைத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளேன். என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது", என்றார்.