தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரேசிலுக்கு பறந்த இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் - பாரத் பயோட்டெக் தயாரித்துள்ள கோவாக்ஸின்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளின் 20 லட்சம் டோஸ்கள் பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Brazil
Brazil

By

Published : Jan 23, 2021, 7:50 AM IST

இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு, பாரத் பயோட்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், பல சர்வதேச நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக, பூட்டான், மாலத்தீவு, நேப்பாள், மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும், மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா, சௌதி அரேபியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய நட்பு நாடும், பிரிக்ஸ் அமைப்பின் கூட்டாளியுமான பிரேசில் நாட்டிற்கு 20 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரேசில் நாட்டு தூதர், "சீரம் நிறுவனத்தின் தொழில் நேர்த்திக்கு பாராட்டுகள், இந்த இக்கட்டான சூழலில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள உதவிக்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:விவசாயிகளை மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்த அமைச்சர்...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details