காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் செயற்குழுக் கூட்டம் காணொலி மூலம் இன்று நடக்கவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்டெடுப்பதற்கான வழிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகள், பயிர் கொள்முதல் பிரச்னைகளைத் தீர்ப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சோனியா காந்தி தலைமையில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு! - புலர்பெயர் தொழிலாளர்கள்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கவுள்ளது.
congress-working-committee-to-meet-on-thursday
பின்னர், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ள முடிவுகளை மத்திய அரசிடன் கொடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் சிறு, குறு தொழில்களைக் காக்க பொதுமக்களிடன் ஆலோசனைகளைக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சர்வதேச புத்தக நாள்: வாசிப்பின் அவசியமும்... தேவையும்..!