தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தற்கொலைக்கு முயன்ற காங்கிரஸ் தொண்டர்!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகலை எதிர்த்து அக்கட்சி தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தொண்டர்

By

Published : Jul 2, 2019, 5:48 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலக முடிவெடுத்தார். ஆனால் அவரின் முடிவை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்தது. இருப்பினும் தனது முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்தார்.

தற்கொலைக்கு முயன்ற காங்கிரஸ் தொண்டர்!

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், ராகுலை நேற்று சந்தித்து அவரின் முடிவை திரும்பபெற கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர், ராகுலின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை உண்டாக்கியது.

ABOUT THE AUTHOR

...view details