லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் டெல்லியில் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடும் விவசாயிகளை அவமதிக்கின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மூன்றுச் சட்டங்களும் அதிகாரப் பேய்கள். நீங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிகாரம் அளித்தால், இந்தச் சட்டங்கள் நீக்கப்படும். இந்தச் சட்டங்கள் நீக்கப்படும் வரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும்” என்றார்.