தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை! - மகாராஷ்டிராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Mallikarjun Kharge

By

Published : Oct 21, 2019, 8:36 AM IST

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மகாராஷ்டிராவில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. விவசாயிகள் மற்றும் பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்களின் வாக்குகளை காங்கிரஸ் பெறும்.

மேலும் 2,200 தொழிற்சாலைகள் மகாராஷ்டிராவில் மூடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கையை காரணம். ஆக, மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்வார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும்’ என்று கூறினார்.

மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 370 சட்டப்பிரிவு காஷ்மீர் ஆட்சியாளர்களின் ஊழலை பாதுகாத்துள்ளது' -அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details