தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐம்பது ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிதான் - குலாம் நபி ஆசாத் விமர்சனம் - ஐம்பது ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்கட்சிதான்

டெல்லி: உள்கட்சி தேர்தல் நடைபெறவில்லை எனில், ஐம்பது ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

By

Published : Aug 28, 2020, 3:02 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர் உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதுகுறித்து விவாதிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்றது. இதில், கடிதம் எழுதியவர்களை கட்சியின் மற்ற பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதனால், குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் அதிருப்தி அடைந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உள்கட்சி தேர்தல் நடைபெறவில்லை எனில், ஐம்பது ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் இருக்கும் என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தேர்தலை நடத்துவதன் மூலம் கட்சிதான் பலன்பெறும். தேர்தலை நடத்தாமல் தலைவரை நியமித்தால் அவருக்கு கட்சியில் ஒரு விழுக்காட்டினர் கூட ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர், மாநில தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தலை நடத்தினால் தங்கள் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உள்கட்சி தேர்தல் மூலம் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் அவர்களை நீக்க முடியாது. எனவே, இதில் என்ன பிரச்னை இருக்கிறது? கட்சியின் மீது அக்கறை உள்ளவர்கள் கடிதம் எழுதியவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்" என்றார்.

கடிதம் எழுதிய 23 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய முன்னாள் அமைச்சர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, அம்பிகா சோனி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது - ராணுவ மருத்துவமனை

ABOUT THE AUTHOR

...view details