கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு தரப்பினர் பாதிப்படைந்தனர். குறிப்பாக, வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவலம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியது.
இதனையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் மாநிலத்துக்கு அனுப்ப சிறப்பு போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் ஆகியோரை அவர்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.