பாட்னா:மூன்று கட்டமாக நடைபெற்ற பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(நவ.10) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் மகா கூட்டணி, மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்குப் போதிய அளவு பெரும்பான்மை கிடைக்கப்பெறாமல் உள்ளது.
இதனால், தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் பார்வையாளரான அவினாஷ் பாண்டே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு மாறுவதைத் தடுக்க முயற்சி செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.