புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பிரமிளா மதியழகனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ' காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்துவிட்டு, தலை இல்லாமல் அலைகிறது. ராஜீவ் காந்தி கொலை குறித்து நான் பேசியது வரலாறு ஆகும்.
'தலையில்லாத' காங்கிரஸ் கட்சி: சீமான் விமர்சனம்! - Congress is wandering like a headless Mundam
புதுச்சேரி: தலையில்லாமல் அலைகிற கட்சியாக காங்கிரஸ் உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
எங்கள் இனப் பகைவன் காங்கிரஸ், அதேபோல் எங்கள் இனத்துரோகி திமுக. இவர்கள் செய்வதை வேடிக்கை பார்ப்பவர்கள் தான் பாஜகவினரும், அதிமுகவினரும் ஆவார். காசு கொடுத்தால் தான் வாக்கு என்றால், அப்படிப்பட்ட வாக்குபோடத் தேவையில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அப்போது நாங்கள் போராடினோம். ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி எங்களை எதிர்த்துப் போராடி வருகிறது. இது எங்கள் கட்சியின் வளர்ச்சியைக் காட்டுகிறது' என்றார்.
இதையும் படிங்க :சீமான் மீது தேசதுரோக வழக்குப்பதிய வேண்டும் - காங். எம்.பி. ஜெயக்குமார்
TAGGED:
puduchery latest news