புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கம் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருடன் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், கூட்டணிக் கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் ஆகியோர் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் வேட்புமனுத் தாக்கல் - புதுச்சேரி காங்கிரஸ் கட்சி
புதுச்சேரி: பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கம் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
![புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் வேட்புமனுத் தாக்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2765485-480-c8fd4d01-92c1-46af-8a14-cf764c4540d7.jpg)
முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கம்
பின்னர் மாவட்ட ஆட்சியர் அருணிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளரான வைத்தியலிங்கம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து வேட்பாளருடன் அக்கட்சியினர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தடைந்தனர்.