மகாராஷ்டிரா மாநிலத்தில் யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். நேற்று வரை உத்தவ் தாக்கரே முதலமைச்சராவார் என்று கூறி வந்த நிலையில், இன்று இந்நிகழ்வு அரங்கேறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்: அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்!
மும்பை: மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக இன்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்திற்கு வருமாறு அக்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக சரத் பவார், இதற்கும் தன்னுடைய கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். மேலும், உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் நண்பகல் 12:30 மணிக்கு சந்தித்து பேசவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அக்கட்சியினருக்கு அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மும்பையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ - ஒரே போடாக போட்ட சரத் பவார்!