தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி - karnataka political news in tamil

பெங்களூரு: பாஜகவுக்குள் உட்கட்சி பூசல் நிலவும் சூழலில், அதிருப்தி எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுத்து கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்துவருகிறது.

கர்நாடாக அரசியல் பிரச்னை  எடியூரப்பா ஆட்சியில் சிக்கல்  எடியூரப்பா ஆட்சிக் கவிழ்ப்பு  karnataka bjp rebel mla  karanataka political crisis  karnataka political news in tamil
கர்நாடாகவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி

By

Published : May 29, 2020, 8:02 PM IST

கர்நாடகா பாஜகவுக்குள் பனிப்போர் தொடங்கியுள்ளதால், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்(டி.கே.எஸ்) தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். பாஜகவுக்குள் பனிப்போர் வெடித்ததைத் தொடர்ந்து பாஜக ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுத்துவிட்டால், ஆப்ரேசன் கமலாவை செயல்படுத்தி ஆட்சியை பிடித்துவிடலாம் என டி.கே.எஸ் எண்ணிவருகிறார்.

டி.கே.எஸ். திட்டம்: அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, டி.கே.எஸ் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவைக் கோறுவார் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் டிகேஎஸ்க்கு ஆதரவு வழங்கும்பட்சத்தில் எடியூரப்பா ஆட்சி பெருமான்மையை இழந்துவிடும் என்றும் தெரிவிக்கின்றனர். அதன்பின்பு நடத்தப்படும் தேர்தலில் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டி.கே.எஸ் முதலமைச்சர் ஆவார் என்றும் கருதுகின்றனர்.

டி.கே.எஸின் ரகசிய உரையாடல்: எடியூரப்பா எவ்வாறு காங்கிரஸ், ஜே.டி.எஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுத்தாரோ அதேபாணியை டி.கே.எஸும் கடைபிடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், அதற்காக அவர் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அவ்வளவு எளிதான காரியம் அல்ல: டி.கே.எஸ். கர்நாடகாவின் முதலமைச்சராக வர கனவு காண்கிறார். பாஜக ஆட்சியைக் கவிழ்த்து டி.கே.எஸ் அரியணையில் ஏறவேண்டும் என்றால் பாஜகவிலிருந்து 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். பின்பு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் தன்பக்கம் இழுக்கவேண்டும். பின்னர், நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும். கர்நாடகாவின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசை அமைப்பது அவ்வளவு எளிதல்ல.

இதையும் படிங்க:ரகசியக் கூட்டம் நடத்தும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: கர்நாடக பாஜகவில் பிளவு!

ABOUT THE AUTHOR

...view details