மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவராகிறாரா சுஷில் குமார் ஷிண்டே? - சுசில் குமார் ஷிண்டே
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியதை தொடர்ந்து, அடுத்த தலைவராக சுஷில் குமார் ஷிண்டே தேர்ந்தேடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சுசில் குமார் ஷிண்டே
77 வயதான சுஷில் குமார் ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இவர் சரியான தேர்வாக இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இவரை தவிர்த்து முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடிபடுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.