தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திரா காந்தி நினைவு தினத்தில் மவுன அஞ்சலி - former prime minister Indira Gandhi

டெல்லி: இந்திரா காந்தி நினைவு நாளான வருகிற 31ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் மாவட்ட, மாநில தலைநகரங்களில் மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்படுகிறது.

Congress to observe 35th death anniversary of Indira Gandhi

By

Published : Oct 23, 2019, 4:28 PM IST

வருகிற 31ஆம் தேதி இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 35ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த நாளை தேசியத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பொருத்தமான தினமாக அனுசரிக்க காங்கிரஸ் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திரா காந்தியின் மறைவு தினமான அக்டோபர் 31ஆம் தேதியன்று ஒவ்வொரு மாவட்ட, மாநில தலைநகரங்களில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றும் வகையில் பொருத்தமான நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீமான் சர்ச்சை பேச்சுக்கு திருமுருகன் காந்தியின் மழுப்பலான பதில்!

ABOUT THE AUTHOR

...view details