தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு... இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து, இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு... இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு... இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

By

Published : Sep 24, 2020, 1:35 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவசாயிகள் விலை ஒப்பந்த மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வணிக மற்றும் வர்த்தக மசோதா என இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு அங்கிருந்த எதிர்க்கட்சியினர் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவையை அவமதித்த குற்றத்திற்காக 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் தற்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் கையெழுத்துக்காக வைக்கப்பட்டுள்ளது எனத்தெரிகிறது. இதைக் கண்டித்து பல மாநிலங்களில் அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று(செப்.23) டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில், இன்று( செப்டம்பர் 24) நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், டெல்லியில் பல இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வேளாண் மசோதாவிற்கு எதிராக சுமார் 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி, அதனை குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸார் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details