டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஜூன் 23ஆம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இணைய காணொலி காட்சி வாயிலாக இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. எல்லையில் பதற்றத்தை தணிக்க அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை நடத்தும் படி ஆளும் பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.