தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொருளாதார மந்தநிலை, காய்கறிகள் விலை உயர்வு: காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் - economic slowdown

டெல்லி: நாட்டில் பொருளாதார மந்தநிலை, காய்கறிகள் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

congress

By

Published : Nov 16, 2019, 12:18 PM IST

நாட்டில் பொருளாதாரம் மந்தநிலை, காய்கறிகள் விலை உயர்வு இருந்துவரும் நிலையில் அது குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் 15 குருத்வார் ரகப்கன்ச் சாலைப் பகுதியில் நடைபெறுகிறது.

இதில், பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ஆஷா குமாரி, கே. சுரேஷ், சுனில் ஜாக்கர், அசோக் கெலாட், அனந்த் சர்மா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், கட்சியின் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்தக் கூட்டம் குறித்து அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத், "நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இது குறித்து விவாதிக்க அனைவரும் கூடியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸின் மற்றொரு முக்கியப் பிரமுகர் ஒருவர், "மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையான தக்காளி, வெங்காய விலை உயர்வு குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details