புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முத்தியால்பேட்டை பகுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இருசக்கர வாகனத்தை சவப்பாடையாக அமைத்து நூதன போராட்டம் நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சங்கர், செந்தில் குமரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை மத்திய பாஜக அரசு உடனடியாக குறைக்கவில்லை எனில் போராட்டம் தீவிரமடையும் என்று புதுச்சேரி மாநில காங் நிர்வாகிகள் போராட்டத்தில் தெரிவித்தனர்.
இதுபோல, புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுநாராயணன் எம்எல்ஏ தலைமையில் ராஜ்பவன் தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.