ஏஐஎம்ஐஎம் (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜகவின் பீடமாகச் செயல்பட்டு வாக்குகளைப் பிரிப்பதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
நேற்று (நவ.24) ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மகேஷ் ஜோஷி, "ஓவைசி பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவை. பாஜகவின் அறிவுறுத்தலின்பேரில்தான் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், ராஜஸ்தான் மாநில மக்கள் அத்தகைய அரசியல்வாதிகளைக் கண்டிப்பாக நிராகரிப்பார்கள்" என்று தெரிவித்திருந்தார். பின்னர் அக்கருத்திலிருந்து பின்வாங்கினார்.
இதனிடையே, பாஜக பொதுச்செயலாளர் அல்கா சிங் குர்ஜார், ஓவைசி பாஜகவின் கைப்பாவை எனக் கூறியதை நிராகரித்துப் பேசினார். "அசாதுதீன் ஓவைசியும், காங்கிரசும் சமாதான கொள்கையைப் பின்பற்றி ஒத்தக் கருத்துடன் செயல்படுகிறார்கள். காங்கிரசும், ஓவைசியும் வேறு வேறு அல்ல.