தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2020, 1:11 PM IST

ETV Bharat / bharat

ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் கட்சிப் பதவியிலிருந்து இடைநீக்கம்!

லக்னோ: ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

congress-suspends-rebel-uttar-pradesh-mla-from-womens-wing
congress-suspends-rebel-uttar-pradesh-mla-from-womens-wing

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்ததால், அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சியினர் புகாரளித்தனர். இந்த புகார் நிலுவையில் உள்ளது.

சில நாள்களுக்கு முன்பு வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள உத்தரப் பிரதேத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர ஆயிரம் பேருந்துகள் தயாராக உள்ளன என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆயிரம் பேருந்துகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு அரசு சார்பாக கேட்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அதிதி சிங், ''பேரழிவின்போது இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் தேவைதானா? காங்கிரஸ் கட்சி அளித்த ஆயிரம் பேருந்துகளில் பாதிக்கும் மேல் போலி ரிஜிஸ்ட்ரேஷன் எண்களைக் கொண்டவை, 297 பேருந்துகள் சேதமடைந்தவை, 98 வாகனங்கள் ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஆம்புலன்ஸ்கள், 68 வாகங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை. உங்களிடம் பேருந்துகள் இருந்தால் ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ஏன் அனுப்பவில்லை?

கோடா பகுதியில் சிக்கித்தவித்த மாணவர்களை அழைத்து வர யோகி ஆதித்யநாத் ஒருநாள் இரவு முழுவதும் முயற்சி செய்து பேருந்துகள் அனுப்பிவைத்தார். இதனை ராஜஸ்தான் முதலமைச்சரே பாராட்டினார்'' என சொந்தக் கட்சியையே விமர்சித்தார். இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங்கை மகளிர் அணி பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.

இதையும் படிங்க:12 உயிர்களைக் காவு வாங்கிய ஆந்திர கேஸ் விபத்து: மன்னிப்பு கோரிய உரிமையாளர்!

ABOUT THE AUTHOR

...view details