மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து சமூக வலைதளங்கலிலும் காந்தி குறித்த வாசகங்கள் ட்ரெண்டாகி கொண்டிருக்கும் போது மறுப்பக்கம் '#Godse Amar Rahe' (நாதுராம் கோட்சே எப்போது எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நாடளுமன்ற உறுப்பினருமான மணீஷ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாதுராம் குறித்த கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பும் செயலில் யார் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் அதற்கு யார் பின்புலமாக உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய பாஜக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று அவர் கேள்வியெழுப்பினார்.