டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளருமான அஜய் மக்கான் காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “டெல்லியில் கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ளது. எனவே மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தால் ஆதரிப்பதாக கூறினார்.
மேலும் தளர்வுகளுடன் கூடிய பகுதி நேர முடக்கம் மோசமான விளைவு என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தேசிய அளவில் கோவிட்-19 பெருந்தோற்று பாதிப்பை விட டெல்லியில் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.
அந்த வகையில் மாநிலத்தில் ஐந்தில் ஒருவர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாளொன்றுக்கு பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கிவருகிறோம்.
இதில் 20 விழுக்காடு பாதிப்பாளர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் கூடுதலாக அவசர சிகிச்சை வசதி கொண்ட 600 படுக்கைகள் தேவைப்படும்” என்றார்.