பாஜக வெளியிட்ட மக்களவைத் தேர்தலுக்கான முதல் பட்டியலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது.
அத்வானிக்கு சீட் மறுப்பு; காங்கிரஸ் தாக்கு..! - சீட்
டெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் அத்வானிக்கு சீட் மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எல்.புனியா பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனைக் குறித்து கருத்துத் தெரிவிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எல்.புனியா, மிகச் சிறந்த பாராளுமன்றவாதியான அத்வானிக்கு பதில் அமித் ஷாவுக்கு சீட்டுக் கொடுத்ததில் இருந்தே பாஜக, அமித் ஷா கையில் இருப்பதுத் தெரிகிறது எனக் கூறினார்.
ஆனால், காந்தி நகர் தொகுதியில் காலம் காலமாக பாஜகவை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவரான அத்வானி போட்டியிடுவதுதான் வழக்கம். 1991 முதல் 1998, 1999, 2004, 2009, 2014 ஆகிய அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் அத்வானி போட்டியிட்டு வென்றுள்ளார். 1996ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் மட்டும் அத்வானி ஹவாலாவழக்கில் சிக்கியதால் தானாக முன் வந்து தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார்.