ஜம்மு: அனந்தநாக் மாவட்டம் லோக் பவான் பகுதியைச் சேர்ந்த அஜய் பண்டிட் பஞ்சாயத்து தலைவராகப் பணியாற்றி வந்தார். நேற்று (திங்கள்) அவர் வீட்டின் அருகே தீவிரவாதிகளால் சரமாரியாக சுடப்பட்டார். காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட் - தலைவர்கள் இரங்கல் - jammu kashmir
ஜம்முவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தீவிரவாதிகளால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை
இச்சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விடடர் பக்கத்தில், "ஜம்முவில் ஜனநாய முறையில் பணியாற்றிய அஜித் பண்டிட்டை இழந்து வாடும் அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். வன்முறை ஒருபோதும் வெல்லாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
“அஜித் பண்டிட்டின் இறப்புக்கு வருந்துகிறேன். அடிமட்ட அரசியல் செயற்பாட்டாளர் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலை கண்டிக்கிறேன்” என்று ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.