குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இதேபோல மேற்குவங்க அரசும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் உள்ள சட்டச்சிக்கல் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதன்படி மாநில அரசே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழியாமல், உறுப்பினர் ஒருவர் முன்மொழிவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.