மக்களவைத் தேர்தலில் கிடைத்த தோல்வி காங்கிரஸ் கட்சியை தொய்வடைய செய்திருந்தது. இருப்பினும் மகாராஷ்டிரா, ஹரியானா அரசியல் முடிவுகள் காங்கிரசுக்கு சற்று உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதற்கிடையில் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. நக்சலைட்டுகள் பாதிப்பு கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்கு ஐந்து கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ளது.
வருகிற 30ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 20ஆம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. முடிவுகள் 23ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்நிலையில் காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்! இந்த நிலையில் கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் விவரம் வெளியாகியுள்ளது. இதில் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளான ஆலம்கீர் ஆலம், இர்பான் அன்சாரி, ஆர்.சி. பிரசாத், சஞ்சங் சிங், மன்னன் மாலிக் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முறையே பாகூர், ஜம்தாரா, ஹசரிபார்க், போகரோ, தன்பாத் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர். கட்சியின் மாநிலத் தலைவர் ராமேஷ்வர் ஓரான் லோகர்தகா தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. மற்ற தொகுதிகள் கூட்டணிக்கு விட்டுகொடுத்துவிட்டன.
இதையும் படிங்க : ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆலோசனை