தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி தேர்தல் - காங்கிரஸ் நட்சத்திர பரப்புரையாளர் பட்டியல் - டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

நட்சத்திர பட்டியல்
நட்சத்திர பட்டியல்

By

Published : Jan 22, 2020, 4:42 PM IST

தேர்தல் என்றாலே நட்சத்திர பரப்புரையாளர்களை அரசியல் கட்சியினர் களமிறக்குவது வழக்கம். அந்த வகையில் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் அரசியல் கட்சியினர் தத்தமது கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நட்சத்திர பரப்புரையாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

தேசிய கட்சியான பாஜக அந்த பட்டியலை வெளியிட்ட நிலையில், மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸும் தன் பங்கிற்கு ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அப்பட்டியலில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சசி தரூர், பிரியங்கா காந்தி, நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் ஆகியோரும் சினிமா நட்சத்திரங்கள் சத்ருகன் சின்கா, குஷ்பு சுந்தர், நக்மா, ராஜ் பாப்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்

இப்பட்டியலில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தீப் தீக்சித் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details