இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதில் குளறுபடிகள் உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு நிறுவனங்கள் வெளியிடும் தரவுகளில் வேறுபாடுகள் உள்ளது ஏன்?
(நேற்று) காலை 11.45-க்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.