சோனியா காந்தி, வழக்கமான உடல் பரிசோதனை செய்துகொள்வதற்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர் அரூப் குமார் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியாவின் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் ராணா தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! - சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! சோனியா காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8237138-822-8237138-1596124452145.jpg)
சோனியா காந்தி
மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அவர் இன்று (ஜூலை 30) காலை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. ஆண்டனி, அகமது படேல், குலாம் நபி ஆசாத், அனந்த் சர்மா, மல்லிகார்ஜூன கார்கே, அம்பிகா சோனி, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாஜக எம்பிக்கு ஒதுக்கப்பட்ட பிரியங்காவின் அரசு பங்களா