மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. தேசியவாதம் பற்றியும் மக்களை எப்படித் தொடர்புகொள்வது என்பது குறித்தும் கட்சி தொண்டர்களுக்கு காங்கிரஸ் வகுப்பு எடுக்கவுள்ளது. சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ், பாஜகவின் பொய் தேசியவாதத்தை எப்படி மக்களிடையே அம்பலப்படுத்துவது என்பது குறித்தும் வகுப்பு எடுக்கவுள்ளது.
தேசியவாதம் குறித்த வகுப்புகளை எடுக்கவிருக்கும் காங்கிரஸ்!
டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசியவாதம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களுக்கு வகுப்பு எடுக்க இருக்கிறது.
கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மாநிலத் தலைவர்கள், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்கள் இடையேயான இச்சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அலோக் சர்மா, "சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே உண்மையான தேசியவாதத்தை நாட்டு மக்களுக்கு உணரவைத்தது காங்கிரஸ் கட்சி.
தங்களின் தொண்டர்களுக்கு இதுகுறித்த விவகாரங்களில் பயிற்சி அளிப்பது அந்தந்த கட்சிகளின் உரிமை. பாஜகவின் பொய் தேசியவாத்தை அம்பலப்படுத்துவது தற்போது முக்கியத்துவம் பெருகிறது" என்றார்.