காங்கிரஸ் பொதுச்செயலளார் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், பாஜக கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக கட்சித் தலைவர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய குடியுரிமை மசோதா மக்களவையில் கடந்த 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, 10ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வரும் சிவசேனா மக்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இன்று மாநிலங்களவையில் சிவசேனா குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளிக்குமா? என்பது குறித்து இரட்டை நிலைப்பாடு நிலவுகிறது.
குடியுரிமை மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் தேசிய குடியுரிமை மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறினார். இந்த மசோதா சட்டமாக மாநிலங்களவையில் நிறைவேற வேண்டும். மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றும் அளவிற்கு பாஜகவுக்கு பெரும்பாான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல்!