புதுச்சேரி பட்ஜெட் தாக்குதலின் போது முதலமைச்சர் நாராயணசாமி, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற செயலராக உள்ள லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, கடந்த 2002 ஜூன் 14ஆம் தேதி சோனியா காந்தியால் தொடங்கிவைக்கப்பட்ட ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம் நடப்பாண்டு ஜூலையில் முடக்கப்பட்டுள்ளது என ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும், அந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்ட போது நான் கல்வியமைச்சராக இருந்தேன் எனக் கூறிப்பிட்டுள்ள அவர், இத்திட்டத்தை சோனியா காந்தி தொடங்கி வைத்த புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தார்.