மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. தார்மீக பொறுப்பெற்று அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து பலரும் விலகினர். இந்நிலையில், இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வாரா சோனியா காந்தி! - மக்களவைத் தேர்தலில்
டெல்லி: மாநில அளவில் கட்சியை பலப்படுத்த கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை சோனியா காந்தி செப்டம்பர் 12ஆம் தேதி சந்திக்கவுள்ளார்.
congress
மாநில அளவில் கட்சியை பலப்படுத்த, மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாநில சட்டப்பேரவை குழு தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் ஆகியோருடன் செப்டம்பர் 12ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார்.