குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் அரசை கொலையாளிகளுடன் ஒப்பிட்டு விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மணிசங்கர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக தலைவர் டாம் வடேகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “மணிசங்கர் ஐயர் அண்மையில் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும்” என்றார். மேலும், “இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக் காங்கிரசுக்கு ஒளியாக தெரிகிறார். காங்கிரசை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸின் புதிய ஹீரோ ஜாகீர் நாயக்” என்றார்.
இதையும் படிங்க: ’தர்பார்' படத்திற்கு மட்டும் செலவு செய்யாதீங்க’ - ப. சிதம்பரம்