பஞ்சாப்பில் சட்ட விரோத போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளத்தின் ஆட்சி நடைபெற்றபோது, போதைப் பொருள் கடத்தல் அதிகரித்ததாகவும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் அதில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்க காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து, சட்ட விரோத போதை பொருள் விற்பனை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்தது.