புதுச்சேரி மாநிலம் பாகூர் அரசு சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு, அவசர ஊர்தி இருந்தும் ஓட்டுநர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக பாகூர் மாதா கோயிலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்பகுதியில் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.