இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நவம்பர் 10ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்! - congress working committee meeting in delhi
டெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 10ஆம் தேதி அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
"காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 10ஆம் தேதி அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாக காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது, பொருளாதார மந்தநிலை, நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அயோத்தியா சர்ச்சை நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அதற்கு முன் (நவ.17) வெளியாகவிருப்பதால், அது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.