தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநில அரசு சட்டவிரோதமாக எங்கள் தலைவர்களை கைது செய்கிறது - காங்கிரஸ் - தெலங்கான தற்போதைய செய்தி

ஹைதராபாத்: மாநிலத்தில் நடைபெறும் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Uttam Kumar Reddy
Uttam Kumar Reddy

By

Published : Jun 3, 2020, 5:07 PM IST

தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான உத்தம் குமார் ரெட்டி, தெலங்கானா அரசு காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் சட்டவிரோதமாக கைது செய்வதாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "என்னைப்போலவே நாடாளுமன்ற உறுப்பினர் கே.வெங்கட் ரெட்டி, முன்னாள் உள் துறை அமைச்சர் கே.ஜன ரெட்டி ஆகியோரை காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.

இதேபோல் மாநிலம் முழுவதுமுள்ள மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தக் கைது குறித்து எவ்வித முறையான விளக்கத்தையும் அவர்கள் (காவல் துறை) அளிக்கவில்லை.

மாநிலத்தில் தற்போது அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மீறி நாங்கள் ஒரே இடத்தில் அதிகளவில் ஒன்றுகூட முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உயர் அலுவலர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இருப்பினும் சமீபத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கோண்ட போச்சம்மா பாசன திட்டத்தை தொடங்கிவைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இதற்கு காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல நீர்ப்பாசன திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. இது குறித்து ஆய்வு செய்யும் காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும்தான் காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: வென்டிலேட்டர் தயாரிக்க நாசா தேர்ந்தெடுத்த மூன்று இந்திய நிறுவனங்கள்

ABOUT THE AUTHOR

...view details