தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மேற்கு வங்கத்தில் கூடுதல் ராணுவம் வேண்டும்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தல் - amphan west bengal

டெல்லி : ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்குக் கூடுதல் பாதுகாப்புப் படையினரை அனுப்புமாறு, காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

adhir ranjan
adhir ranjan

By

Published : May 27, 2020, 3:13 AM IST

இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "மேற்கு வங்கத்தை ஆம்பன் புயல் தாக்கிச் சென்றபிறகு அங்கு நடைபெறும் நிவாரண, மீட்புப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்டப்பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்படும் உணவு, நிவாரணப் பொருட்களில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலானப் பகுதிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். குடிநீருக்கும் கடும் தட்டுபாடு நிலவி வருகிறது.

பல இடங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. சாலைகள் மாயமாகியுள்ளன. அழுகிய நிலையில் விலங்குகளின் சடலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

பேரிடரைக் கையாள மேற்கு வங்க அரசும் திணறி வருகிறது. ஆகையால், அம்மாநிலத்துக்குக் கூடுதல் பாதுகாப்புப் படையினரை அனுப்ப வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு மாநிலத்தில் ஏற்கெனவே 26 தேசியப் பேரிடர் குழுவினர் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :டெல்லி துக்ளகாபாத்தில் தீ விபத்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details