தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சட்டப்பேரவை உறுப்பினராக 50 ஆண்டை நிறைவுசெய்த உம்மன் சாண்டி!

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் அரசியலின் பிரபலமான முகங்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி கேரள மாநில சட்டப்பேரவை உறுப்பினராக தனது பொன்விழாவை நேற்று கொண்டாடினார்.

Congress leader Oommen Chandy
Congress leader Oommen Chandy

By

Published : Sep 18, 2020, 12:11 AM IST

கேரளாவின் முன்னாள் முதலமைச்சரான உம்மன் சாண்டி 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி புதுப்பள்ளி தொகுதியில் இருந்து சட்டப்பேரவை நோக்கி பயணம் தொடங்கி நேற்றுடன் (செப்.17) 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கரோனா பெருந்தொற்றை கருத்தில்கொண்டு எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் உம்மன் சாண்டி ஈடுபடவில்லை. கேரளா முழுவதும் காங்கிரஸ் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் இந்த பொன்விழா நாளை கொண்டாடினார்கள்.

1943ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, கோட்டையம் மாவட்டம் புதுப்பள்ளியில் கரோட்டு வல்லக்கலில் சாண்டி மற்றும் பேபி ஆகியோருக்கு பிறந்த உம்மன் சாண்டி, காங்கிரஸுடன் இணைந்த மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

கே.எஸ்.யுவின் 1958ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் அவரது அரசியல் வாழ்க்கையை மாற்றின. 1967 இல், சாண்டி கே.எஸ்.யுவின் மாநிலத் தலைவரானார். 1969ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவான இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக பணியாற்றும்போது, ​​உம்மன் சாண்டி கோட்டையத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் இருந்து தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார். சிபிஎம் தலைவர் ஈஎம் ஜார்ஜ் ஆகியோருக்கு எதிராக களம் இறங்கிய சாண்டி, 7288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வயதில் சட்டப்பேரவை உறுப்பினரானார்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜனதா கட்சி மாநில தலைவர் பி.சி செரியனுக்கு எதிராக களம் கண்ட உம்மன் சாண்டி, 15 ஆயிரத்து 910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கேரளாவில் கே.கருணாகரன் தலைமையிலான அமைச்சரவையில், உம்மன் சாண்டி முதல் முறையாக அமைச்சரானார், அப்போது அவருக்கு தொழிலாளர் துறை ஒப்படைக்கப்பட்டது.

ராஜன் கொலை வழக்கு மற்றும் சர்ச்சையைத் தொடர்ந்து, கருணாகரன் பதவி விலகினார், ஏ.கே ஆண்டனி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதே நேரத்தில் உம்மன் சாண்டி தொழிலாளர் அமைச்சராக தொடர்ந்தார்.

1980இல் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) வேட்பாளராக நின்று மூன்றாவது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் உம்மன் சாண்டி வெற்றி பெற்றார்.

தேசிய மட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதன் ஒரு பகுதியாக, உம்மன் சாண்டி தொடர்புடைய காங்கிரஸ் யு என பிரிந்த பிரிவு எல்.டி.எஃப். பின்னர், காங்கிரஸ் ஏ என்று அறியப்பட்ட இந்த பிரிவு, தேசிய அளவில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரிவில் இணைந்தது. 1981ஆம் ஆண்டில், காங்கிரஸ் ஏ பிரிவு ஆளும் எல்.டி.எஃப்-க்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால், ஈ.கே. நயனார் தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்தது.

பின்னர், கே.கருணாகரன் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில், உம்மன் சாண்டி உள்துறை அமைச்சரானார். 1982 தேர்தலில், அவர் நான்காவது முறையாக 15 ஆயிரத்து 983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கருணாகரன் அமைத்த அமைச்சரவையில் அவரது பெயர் அமைச்சராக கருதப்பட்டாலும், உம்மன் சாண்டி சிரியாக் ஜானை பரிந்துரைத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கே.கருணாகரனுடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து உம்மன் சாண்டி யுடிஎஃப் கன்வீனர் பதவியில் இருந்து விலகினார்.

1991ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாகரன் அமைச்சரவையில், சாண்டி நிதி அமைச்சரானார். 1992இல் தொடங்கி 1994 வரை தொடர்ந்த காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தல் தொடர்பான வாதங்கள் மற்றும் வேறுபாடுகளையடுத்து உம்மன் சாண்டி இறுதியாக கருணாகரன் அமைச்சரவையில் இருந்து விலகினார்.

ஆகஸ்ட் 2004ஆம் ஆண்டு, உம்மன் சாண்டி கேரள முதலமைச்சரானார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் யுடிஎஃப் தோல்வியடைந்தபோது, ​​சாண்டி மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரானார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

இருப்பினும், சாண்டி அரசாங்கத்தின் மீது மின்சக்தி ஊழல், பார் லஞ்சம் மற்றும் இதுபோன்ற வழக்குகள் உள்ளிட்ட சர்ச்சைகளால் களங்கப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னணி அரசியலில் இருந்து விலகி இருந்தபோதிலும், கட்சிக்கு தேவைப்படும் போதெல்லாம் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஆலோசனை வழங்கி கட்சியை வழிநடத்தியிருந்தார்.

சாண்டி இதுவரை தொடர்ந்து 11 சட்டப்பேரவை தேர்தலில் ஒரே தொகுதியிலிருந்து போட்டியிட்டு தொடர் வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போது கேரளாவில் சட்டப்பேரவை உறுப்பினராக 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details