தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு: நாராயணசாமி அறிவிப்பு! - congress leader namachivayam

புதுச்சேரி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் வருகின்ற 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக புதுச்சேரி காங்கிரஸ் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்  காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்  முதலமைச்சர் நாராயணசாமி  congress leader namachivayam  pudhucherry cm
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் முழு அடைப்பு: நாராயணசாமி அறிவிப்பு!

By

Published : Dec 23, 2019, 1:10 PM IST

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வருகின்ற 26ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்து கட்சியினரும் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். அடுத்ததாக 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை

வருகின்ற 27ஆம் தேதி காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details