தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் முன்னாள் தலைவரின் பேரன் சாலை விபத்தில் மரணம் - Congress leader

ஐதராபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் பொன்னாலா லக்ஷ்மையாவின் பேரன் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரணம்

By

Published : Aug 13, 2019, 11:14 AM IST

Updated : Aug 13, 2019, 12:02 PM IST

தெலுங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பொன்னாலா லக்ஷ்மையா. இவரது பேரன் த்ருபத். இன்று காலை த்ருபத் ஐதராபாத்திலுள்ள கெளச்சிபாலி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் அதிக வேகமாக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில், த்ரூபத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேரன் சாலை விபத்தில் மரணம்

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், த்ரூபத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உஸ்மானியா பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரின் பேரன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : Aug 13, 2019, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details