தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'திரும்பி வந்துட்டேன், அனைவருக்கும் நன்றி' - டி.கே.சிவக்குமார் - Congress leader DK Shivakumar gets Bail

டெல்லி: திகார் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Congress leader DK Shivakumar gets Bail

By

Published : Oct 24, 2019, 3:39 AM IST

கர்நாடக காங்கிரஸில் வலிமையான தலைவராக திகழ்பவர் டி.கே.சிவக்குமார். சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக இருந்தார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சரியாக சமாளித்தவர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் பாராட்டுப் பெற்றவர்.

இந்த நிலையில் இவர் மீது பணமோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3ஆம் தேதி அமலாக்கத்துறையினர் இவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, ரூ.25 லட்சம் பிணை பத்திரம், வெளிநாடு செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு பிணை கிடைத்தது.

திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் பேசியதாவது, எனக்கு பிணை கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் திரும்பி வந்துள்ளேன். அனைவருக்கும் எனக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடி நிலையின் போது நீங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்காக மீண்டும் நன்றி, இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டி.கே. சிவக்குமாருக்குப் பிணை

ABOUT THE AUTHOR

...view details