கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது! - அமலாக்கத்துறை
டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து, டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் டி.கே. சிவக்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் நான்கு நாட்களாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சட்ட விரோத பண பரிவரத்தனை வழக்கில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கர்நாடக காங்கிரஸின் முக்கிய புள்ளியாக வலம் வரும் இவர் மீதான அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.