கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மக்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்விக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அவரின் மனைவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரசின் வழிகாட்டுதலின்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையே, சிங்வியின் மகன் மற்றும் குடும்பத்தார் கரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.