தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஸ்பீக் அப் இந்தியா' மூலம் குரல் கொடுக்கும் சோனியா காந்தி!

டெல்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில், 'ஸ்பீக் அப் இந்தியா' என்ற பரப்புரையை சோனியா காந்தி தொடங்கியுள்ளார்.

சோனியா
சோனியா

By

Published : May 28, 2020, 4:26 PM IST

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், மத்திய அரசு பாதிப்பின் வலியை செவி கொடுத்து கேட்க மறுக்கிறது.

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக லட்சக்கணக்கான மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் காலி வயிறுடன் நடைபயணமாகச் செல்லும் அவல நிலை தொடர்கிறது. இவர்களின் வலியை ஒட்டுமொத்த நாடே கேட்கும் சூழலில், மத்திய அரசு மட்டும் செவிசாய்க்க மறுக்கிறது.

சோனியா காந்தி காணொலி

எனவே, ஏழைகள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் தங்களுடைய குறைகளை 'ஸ்பீக் அப் இந்தியா' என்ற பெயரில் பதிவிட்டு தெரிவியுங்கள். மேலும், வேலையிழந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 200 நாள் வேலை அரசு கொடுக்க வேண்டும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழைகளுக்கு ரூ.7,500 உதவித்தொகையை நேரடியாகச் செலுத்த வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்த நேரத்தில் நிச்சயம் வெற்றிபெற முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றும் ஸ்பைஸ்ஜெட்

ABOUT THE AUTHOR

...view details