தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்! - கோவா
தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கே.சி. வேணுகோபால் பிரியங்கா காந்தி Congress new Incharges Tamilnadu congress Priyanga Gandhi Manickam tagore chellakumar ஜோதிமணி Jothimani Pudhucherry Goa புதுச்சேரி கோவா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள்
By
Published : Sep 11, 2020, 10:10 PM IST
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் விவரம் வருமாறு:-
எண்
பெயர்
மாநிலம்
01
முகுல் வாஸ்னிக்
மத்தியப் பிரதேசம்
02
ஹரீஷ் ராவத்
பஞ்சாப்
03
உம்மன் சாண்டி
ஆந்திரா
04
தாரீக் அன்வர்
கேரளா, லட்சிய தீவுகள்
05
பிரியங்கா காந்தி
உத்தரப் பிரதேசம்
06
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
கர்நாடகா
07
ஜிதேந்திர சிங்
அஸ்ஸாம்
08
அஜய் மக்கான்
ராஜஸ்தான்
09
கே.சி. வேணுகோபால்
ஒருங்கிணைப்பாளர்
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோதிமணி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இதர பொறுப்பாளர்களின் விவரம் வருமாறு:-
எண்
பெயர்
பொறுப்பு
01
மதுசூதன் மிஸ்திரி
தலைவர்
02
ராஜேஷ் மிஸ்ரா
உறுப்பினர்
03
கிருஷ்ண பைரா கௌடா
உறுப்பினர்
04
ஜோதிமணி
உறுப்பினர்
05
அரவிந்தர் சிங் லவ்லி
உறுப்பினர்
மேலும், காங்கிரஸ் கட்சி மற்றும் மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களான மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆந்திராவுக்கும், காங்கிரஸ் மூத்தத் தலைவர் செல்லக்குமார் ஒடிசா மாநிலத்துக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.