காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை என பத்திரிக்கைகளில் தகவல் வெளிவந்த நிலையில் இரு கட்சிகளிடையே நிலவும் மாற்று கருத்துகளை தீர்ப்பதற்கு முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவ கவுடா, கா்நாடகா மாநிலம் முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கா்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தேவ கவுடா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள்
பெங்களுரூ: காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை பாதிக்கும் வகையில் கட்சித் தொண்டர்கள் செயல்பட வேண்டாம் என தேவ கவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்போது பேசிய தேவ கவுடா, "தானும் சித்தராமையாவும் ஒன்று சேர்ந்து இருக்கிறோம், ஒன்று சேர்ந்து தேர்தலில் வெற்றி பெறுவோம், மாநிலம் முழுவதும் சென்று இரு கட்சிகளிடையே நிலவும் பிரச்னைகளை தீர்ப்போம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை பாதிக்கும் வகையில் கட்சித் தொண்டர்கள் செயல்பட வேண்டாம் எனவும், பாஜகவை எதிர்கொள்வது தான் கூட்டணியின் முதற்கட்ட குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். கா்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் எட்டு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.